கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று (மார்ச்.18) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரீதா தலைமை தாங்கினார். சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் ராமசாமி, மாநில துணை செயலாளர் வளர்மதி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்; பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.