16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை

59பார்த்தது
16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் கலந்து சில தினங்களாக கன மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருவாரூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி