கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.