விவசாயிகள் காப்பீடு செய்யலாம், ஆட்சியர் தகவல்

2269பார்த்தது
விவசாயிகள் காப்பீடு செய்யலாம், ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல் சம்பா-II, மக்காச்சோளம்- II, பருத்தி-1 உளுந்து, மணிலா, கரும்பு, மரவள்ளி, கத்தரி மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களில் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்டஈடு வழங்கி வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் (சம்பா) -II பயிருக்கு 15. 11. 2023-ந்தேதி வரையும், மக்காச்சோளம்-II, பருத்தி-II ஆகிய பயிர்களுக்கு 31. 10. 2023, உளுந்து பயிருக்கு 15. 11. 2023, மணிலா பயிருக்கு 30. 12. 2023, கரும்பு பயிருக்கு 30. 3. 2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29. 2. 2024, கத்தரி மற்றும் வெங்காய பயிருக்கு 31. 01. 2024-ந் தேதி வரையும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி