கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் தனிநபர் கடன் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.