தியாகதுருகம் ஒன்றியம், நாகலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளி புதிய கட்டிடம், மாதிரி பள்ளி மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் மாதிரி பள்ளி மாணவிகள் விடுதி கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஒவ்வொரு கட்டிடமாக தனித்தனியாக சென்று மூன்றாம் தளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக பார்வையிட்டும், திட்ட மதிப்பீடு, பணி ஆரம்பிக்கப்பட்ட காலம், பணி முடிவடையும் காலம், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம், கட்டுமானத்தின் தரம், கட்டிடம் திட்ட முறைப்படி உரிய விதிமுறைகளின் படி பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்து கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.