பைக் ரேசில் ஈடுபட்ட 5 இளைஞா்கள் மீது வழக்கு பதிவு

78பார்த்தது
பைக் ரேசில் ஈடுபட்ட 5 இளைஞா்கள் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மாடூா் சுங்கச்சாவடி பகுதிகளில் இளைஞா்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் மாடூா் சுங்கச்சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு 5 இளைஞா்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டனா். அப்போது, 3 இளைஞா்கள் பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தனா். அவா்களை போலீஸாா் மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், 2 போ் தப்பியோடிவிட்டனா். விசாரணையில், காயமடைந்தவா்கள் தண்டலை கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் நிஷாந்த் (22), நாகராஜசோழன் மகன் கீதாபாலன்(26), கணேசன் மகன் மகேஷ்(26) என்பதும், தப்பியோடியவா்கள் விளக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சக்லைன் மகன் சையத் அக்கரம் (22), வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜ் மகன் சதீஷ்(19) என்பதும் தெரிய வந்தது. இதில், மகேஷ் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி