கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெற தகுதியானர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சார்பில் தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24ல் மாநில அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு ஏற்படுத்தியிருத்தல். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்கப்படுகிறது.
அதற்கு 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து https: //Awards. tn. gov. in என்ற இணையதளத்தின் மூலம் இணையவழி விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாகவும், இணையதளத்திலும் மற்றும் நேரடியாகவும் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலத்தில் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.