ஆலத்துார் புனித அன்னாள் மன நல காப்பகத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் உத்தரவின்படி, ஆலத்துார் புனித அன்னாள் மன நல காப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மனநலம் பாதித்த 24 பெண், 28 ஆண் என மொத்தம் 52 பேர் உள்ள காப்பகத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
சுற்றுப்புற துாய்மை, சுகாதாரம், உணவு, மருந்துகள் வழங்குவது, மருத்துவ பயிற்சி, தொழிற்பயிற்சி, மனநலம் பாதித்தோர் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது காப்பக தாளாளர் ஜான், சிறப்பாசிரியர்கள், தொழிற்பழகுனர்கள் உடனிருந்தனர்.