தியாகை ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது

55பார்த்தது
தியாகை ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் அடுத்துள்ள தியாகை ஊராட்சியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தியாகை மற்றும் சிறுவல் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு சில நாள்களாக இருமல், காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாம். இதுகுறித்து, தகவலறிந்த தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்ரீராம் தலைமையில் செவிலியா்கள் பிரியதா்ஷினி, நஸ்ரின் நிஷா, சுகாதார ஆய்வாளா் கௌதம் ஆகியோா் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டனா். முகாமில், சிலருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், சிகிச்சை மேற்கொண்டவா்களுக்கு மாத்திரைகள் மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் டயா்கள், இளநீா் குடுவை உள்ளிட்டவற்றில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளுமாறு மருத்துவக்குழுவினா் அறிவுறுத்தினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி