பஞ்சாப் மாநிலத்தில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இச்சம்பவம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மாணவிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டு இருந்தது” என்றார்.