ஜோதிடத்தின் படி 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் கிரகங்களின் குருவான குரு, ராஜாவான சூரியன், இளவரசரான புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகலாம். மிதுன ராசியினரின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். கடகத்திற்கு வீடு, சொத்து வாங்கும் கனவுகள் நிஜமாகும். சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து ஆசைகளும் எளிதில் நிறைவேறும். கன்னி ராசிக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி செய்தி தேடி வரும்.