முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று (டிச.22) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்தது. 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 18.3 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.