பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது. அதோடு ரூ.90,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்ந தீர்ப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது, “சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு அளித்துள்ள தீர்ப்பு, நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.