திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி விசாரணை

17பார்த்தது
திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி விசாரணை
சிவகங்கை: திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி 4வது நாளாக விசாரணை நடத்துகிறார். அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரின் பேரில், அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி