புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையை சேர்ந்த முருகேசன் செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்துாரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிகிறார். இந்நிலையில் தனது மகள் புவனேஸ்வரியை, திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் முருகேசன் சேர்த்துள்ளார். "அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. நம் பெருமையின் அடையாளம்" என முருகேசன் கூறியுள்ளார்.