இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 1.65 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதன்படி அக்டோபரில் 37.6 லட்சமும், செப்டம்பரில் 79 லட்சமும், ஆகஸ்டில் 40 லட்சமும், ஜூலையில் 7.58 லட்சத்திற்கும் அதிகமானோர் வேறு நெட்வொர்க்குக்கு மாறியுள்ளனர். முன்னதாக அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த ஜூலையில் தங்கள் கட்டணங்களை 25% வரை உயர்த்தின.