நகைக்கடன் விதிமுறை: நற்செய்தியை கொடுத்த நிதியமைச்சகம்

53பார்த்தது
நகைக்கடன் விதிமுறை: நற்செய்தியை கொடுத்த நிதியமைச்சகம்
உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக்கடன் விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்த நிலையில், தற்போது நிதியமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டுள்ளது. இது மக்கள் குரலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி