ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலம் நடந்தது. இங்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர். சுப முகூர்த்த தினம் என்பதால், மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.840-க்கு ஏலம் போனது. ஜாதி முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.600 - 800 வரையும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.