விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் திரைப்படம் 'ஜன நாயகன்'. இது விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது. அதனால் மிக பிரம்மாண்டமாக ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்து விஜய்யை வழியனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனமும் முடிவு செய்தது. ஆனால், விஜய் பெருந்தன்மையுடன் அதை மறுத்ததாகவும், அவர் சில நாட்களாக படப்பிடிப்பில் எமோஷனலாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.