சுற்றுலாப் பயணிகளுக்கான பவன்(தங்குமிடம்) கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. .
மகாராஷ்டிரா, பவனை மத்திய காஷ்மீரில் உள்ள புத்காமில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இச்காமில் 2.5 ஏக்கர் நிலத்தில் மகாராஷ்டிர பவன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆர்டிகிள் 370 மூலம் ஜம்மு காஷ்மீர் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கும் உரிமையை பாஜக கொண்டுவந்ததது குறிப்பிடத்தக்கது.