டிராவிட், சேவாக்கின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்

91பார்த்தது
டிராவிட், சேவாக்கின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 28 ரன்னில் அவுட் ஆனார். அவர் 9 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த சாதனையை அவர் வெறும் 40 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எடுத்த இந்திய வீரர்களின் சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோரை சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி