இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாவதை தற்போது முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்னா மேனன் உறுதிசெய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஜெயிலர் பாகம்-2 பற்றி நெல்சன் சாரிடம் பேசினேன், அவர் “ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். அதனை கேட்டவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.