திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் மகளும், பாலாஜி மருத்துவமனையின் தலைவருமான ஸ்ரீநிஷாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இன்று 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்தை மறைத்து வரி ஏற்ப்பு செய்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த விசாரணை நடக்கிறது. அதே போல் ஆணவணங்களும், கோடிக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷா மற்றும் மருமகன் நாராயணசாமி இளமாறனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநிஷா 21 நிறுவனங்களின் இயக்குநராக இருப்பதும் தெரியவந்துள்ளது.