’ஜாக்டோ ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தவெக தலைவர் விஜயை பனையூர் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் அவர் கூறுகையில், “4.5 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நிறைவேற்றவில்லை. முதல்வரை சந்தித்தால் போட்டோ மட்டும் எடுத்து கொள்கிறார்கள். எங்களின் நிலைப்பாட்டை விஜயிடம் தெரிவித்தோம். தேவையான ஆதரவையும், ஒத்துழைப்பை தருவதாக அவர் உறுதியளித்தார்" என்றார்.