12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றுதான் அகரம் பணிகள். அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. மீண்டும் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.