மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வர். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமுகம் ஏற்படும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். மேலும், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என அவர் கூறியுள்ளார்.