ஆடி மூன்றாம் பிறை தரிசன வழிபாடு செய்வது பெரும் புண்ணியத்தை தருகிறது. இதை மேற்கொள்வதால் கேட்ட வரம் கிடைப்பதோடு, ஆயுளும் அதிகரிக்கும். இந்த பிறைநாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும் என்பது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கை. அதன்படி இன்று (ஆகஸ்ட் 6) செவ்வாயில் வந்துள்ளது. அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.