அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் இன்று (ஜன., 10) நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது. ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள ஆர்சிசிஎல் கட்டுமான நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்சிசிஎல் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், சோதனை நடைபெற்று வருகிறது.