சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் 18-வது ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. ஆரம்பமே முதலே அதிரடியாக விளையாடிய SRH பேட்டர்கள் ராஜஸ்தான் பௌலிங்கை துவம்சம் செய்தனர். இந்நிலையில், 47 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் சதம் கடந்து 106 ரன்கள் விளாசினார்.