சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா -
ஆஸ்திரேலியா அணிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பலப்பரீட்சை நடத்த உள்ளன. சுப்மன் கில்-க்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக வீரர் அஷ்வின் அணியில் இடம்பெறுவார் எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா -
ஆஸ்திரேலியா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி என்பதால்
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.