பிரேம்ஜி அமரனின் காதலி இவர்தானா..? - விரைவில் டும் டும் டும்!

43472பார்த்தது
பிரேம்ஜி அமரனின் காதலி இவர்தானா..? - விரைவில் டும் டும் டும்!
இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும், இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். 43 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. பிரேம்ஜிக்கு இந்த ஆண்டு கட்டாயம் திருமணம் நடந்து விடும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாடகியும், பிரேம்ஜியின் தோழியுமான வினைதாவை அவர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் குறித்து பெற்றோர் கலந்து பேசி விரைவில் அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி