தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? போராட்டத்தைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.