மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜா - சோனம் தம்பதி மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது அவரை சோனம், காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார். கைதான அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கர்ப்பத்திற்கான பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் முடிவுகள் ‘தெளிவாக இல்லை’ என்று மருத்துவர்கள் கூறினர். ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர். ஆரம்பகால கர்ப்ப பரிசோதனைகள் நிச்சயமற்ற முடிவுகளைத் தருவது பொதுவானது.