உங்கள் கையில் உள்ள ரூபாய் நோட்டு கிழிந்திருக்கிறதா?. அதனை கடைகளில் வாங்கத் தயங்குகிறார்களா?. இந்த சூழலில், அந்த கிழிந்த ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். கிழிந்த நோட்டுகள் அல்லது கறை படிந்த நோட்டுகளை எந்தப் படிவமும் நிரப்பாமல் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.5,000 வரை மாற்றிக்கொள்ளலாம். அப்படி கிழிந்த நோட்டுகளை வங்கி ஊழியர்கள் வாங்க மறுத்தால் உடனடியாக வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்.