மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், உத்தரப்பிரதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நடிகர்கள், அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது என்றும் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.