பேரிச்சம்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் அவற்றைச் செயலாக்க பல இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சல்பைட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வயிற்று வலி, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இரத்தத்தில் பொட்டாசியம் அளவு திடீரென அதிகரிக்கிறது. இது ஹைபர்கேலீமியா பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் தலைசுற்றல், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.