10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் அதை வரவேற்றனர். நல்ல யோசனை என்று கூறினர். 2024ஆம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால், தங்களுக்கு ஓராண்டு வீணாகி விட்டதாக கருதுகின்றனர். ஒருமுறை மட்டும் தேர்வு நடத்துவதால் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கவே இருமுறை தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.