’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வைத்து பாஜக வாக்குகள் கேட்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், “ பாஜகவினர் 'சிந்தூர்' என்பதை நகைச்சுவையாக மாற்றிவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகிறார்கள். இப்போது என்ன மோடியின் பெயரில் 'சிந்தூர்' பயன்படுத்தப் போகிறீர்களா? இது என்ன 'ஒரு நாடு, ஒரு கணவர்' திட்டமா?” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.