இந்தியாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு விதை தான் ஹலீம். இது சாலியா விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகள் தலைமுடி, சருமத்திற்கும் சிறந்தது. தினமும் 5-10 கிராம் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.