Tik Tok-ஐ வாங்குகிறாரா எலான் மஸ்க்?

62பார்த்தது
Tik Tok-ஐ வாங்குகிறாரா எலான் மஸ்க்?
டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் Tik Tok-ஐ வாங்கினால் முதலீடு செய்யத் தயார் என்று சவுதியைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலாலுக்கு சொந்தமான கிங்டம் ஹோல்டிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி தலால் இப்ராஹிம் இதனை அறிவித்துள்ளார். கிங்டம் ஹோல்டிங் தற்போது X மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான X AI ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.  Tik Tok-ஐ மஸ்க் வாங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி