பில் பழங்குடியின மக்கள் இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். முக்கியமாக இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பரவி காணப்படுகின்றனர். தற்போது இவர்கள் இந்த நான்கு மாநிலங்களில் இருந்தும் 49 மாவட்டங்களைப் பிரித்து 'பில் பிரதேசம்' என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.