மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முதல் சிங்கிளான 'சவதீகா' பாடல் இன்று மதியம் 1 மணியளவில் வெளியானது. ஆடியோ தளங்களில் மட்டும் வெளியான இந்த பாடல், மாலை 5:05 மணிக்கு வீடியோ வெளியாகும் என லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த பாடலில், வைரல் வார்த்தையான 'இருங் பாய்' இடம்பெற்றுள்ளது. அட்டகாசமாக வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.