மனிதனுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தூக்கத்திற்கும் நீரிழிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆற்வறிக்கை ‘டயாபட்டீஸ் கேர்’ இதழில் வெளியானது. ஆய்விற்கு 84000க்கும் மேற்பட்டோரின் தூக்க முறைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் தூக்கத்திற்கும் டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு கண்காணிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் ஒழுங்கற்ற முறையில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் அபாயம் 34% அதிகம் என தெரிந்தது.