டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரிக்கள்டனை அவுட்டாக்கியதன் மூலம் IPL-ல் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் IPL-ல் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 29-வது நபராகவும், இந்திய வீரர்களில் 22-வதாகவும் உள்ளார். MI, KKR, DC அணிகளில் இவர் இருந்துள்ளார். இதில், DC அணிக்காக 60 விக்கெட்டுகளையும், KKR அணிக்காக 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.