சில மணிநேரத்தில் போட்டி தொடங்கவேண்டிய மைதானத்தில் மழை பெய்வதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், இன்று (ஜூன் 3) RCB Vs PBKS அணிகளுக்கு இடையேயான IPL 2025 இறுதிப்போட்டி நடக்கிறது. இந்நிலையில், மாலை 4.45 மணிக்கு மேல் அகமதாபாத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. இது ஆட்டத்தின் தன்மையை மாற்றும் என்பதால் ரசிகர்கள் தவிப்பு நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குவாலிபையர் போட்டியிலும் மழை குறுக்கிட்டு நள்ளிரவு வரை ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.