ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 03) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், இன்று காலை மைதானத்திற்கு வெளியே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.