IPL 2025: மழைக் காரணமாக RCB-க்கு எதிரான போட்டி ரத்து செய்யப்பட்டதால், நடப்பு சாம்பியனான KKR பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியா - பாக்., மோதலால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியது. பெங்களூரு மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டி தொடர் மழையால் டாஸ் போடப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்ததால் புள்ளிப்பட்டியலில் RCB முதலிடத்துக்கு முன்னேறிய நிலையில், KKR பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.