நடப்பு ஐபிஎல் தொடரின் 69வது லீக் ஆட்டம் இன்று இரவு ராஜஸ்தானில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை 13 லீக் ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 13 ஆட்டங்களில் ஆடி 17 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் மும்பை வென்றால் 18 புள்ளிகளுடனும், பஞ்சாப் வென்றால் 19 புள்ளிகளுடனும் முதலிடம் பிடிக்கும்.