IPL: 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. RCB அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது. சில சீசன்களாக RCB அணியின் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி வாங்கியது. இந்த நிலையில் RCB அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.